Category Archives: Temple News

விநாயகர் சதுர்த்தி விரதம்

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.

மகா சிவ ராத்திரி விரதம்!

மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவ ராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம்.

வரலாற்று சிறப்பு மிக்க தேர்த் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க தேர்த் திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறைபக்தியுடன் சூழ்ந்திருக்க இனிதே நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா மலையையும் பொருட்படுத்தாது வெகு சிறப்பாக நடைபெற்றது. எலாம் வல்ல விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் தீபாராதனையும் நடைபெற்றன.இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகப்பெருமான் அழகிய சித்திரத் தேரில் வீதியுலா அரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

கொட்டும் மழையையும் ஏராளமான பக்தர்கள்! சப்பறத் திருவிழா இனிதே நடந்தேறியது

சப்பறத் திருவிழா இனிதே நடந்தேறியது. கொட்டும் மழையையும் கருதிற்கொள்ளாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மூன்று மூர்த்திகள் சப்பறத்தில் அமர்ந்து வீதி உலா வந்தமை பார்பவர்களுக்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது. விழாவினை சிறப்பிக்கும் வண்ணம் பாராளமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து ஆலய தர்மகர்த்தா திரு இரா விஜயநாதன், ஆலய மகோற்சவ குருக்கள் நவாலியூர் பிரதிஷ்ட பூசனம் சிவஞான வித்தகர் பிரமஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் அவர்கள் மற்றும் நாதஸ்வர தவில் வித்துவான்கள் ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கி… Read More »

இரா. விஜயநாதன் அவர்கள் பிரம்டன் மாநகர முதல்வர் அவர்களின் கௌரவ சான்றிதல்

இரவுத் திருவிழா இனிதே நடந்தேறியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பிரபல நடன ஆசிரியை மீரா கனகராஷா அவர்களின் மாணவிகள் ஓர் அசத்தலான நடனத்தினை வழங்கி அனைவரையும் இறையருள் கடந்த இன்ப கடலில் மூழ்கடிக்க வழிசமைத்தனர்.

வெள்ளிக்கிழமை பகல் உற்சவம்

2015-05-29 இன்று வெள்ளிக்கிழமை பகல் உற்சவம் காரைநகர் மக்களினால் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். எல்லாம் வல்ல விநாயகப்பெருமான் உள்வீதி சுற்றி முடிந்ததும் வேட்டை திருவிழாவின் சிறப்பம்சமான வேட்டையாடுதல் நிகழ்வினை சமய சடங்குகளுடன் நிகழ்துவதற்காக வெளிவீதி சுற்றிவந்து ஆலயத்தின் வட கிழக்கு மூலையில் வேட்டைத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

16ஆம் திருவிழா இனிதே நடந்தேறியது

2015-05-23 இன்று 16ஆம் திருவிழா இனிதே நடந்தேறியது. விழாவில் வழமைபோல பல பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவின் சிறப்பம்சமாக பிரபல நடன ஆசிரியை ஜெனனி குமார் அவர்களின் மாணவிகள் ஓர் அசத்தலான “சிவகீர்தனம்” என்ற பரத நாட்டிய நிகழ்ச்சியினை வழங்கி பக்தர்களை இறைபக்தியுடன் சந்தோசம் கொள்ள வைத்தனர்.